திருமணமானவருடன் பெண் உல்லாச உறவு - இது பாலியல் வன்கொடுமை கிடையாது நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Kerala
By Thahir Oct 10, 2022 11:07 AM GMT
Report

ஆண் திருமணமானவர் என தெரிந்தும் அவருடன், பெண் பாலியல் உறவு கொண்டால் அது பாலியல் வன்கொடுமை ஆகாது என கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது.

நீதிபதி அதிரடி உத்தரவு 

கேரளாவைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடன் இசைக்குழுவில் பணியாற்றிய ஆண் ஒருவர் தன்னை திருமணம் செய்து கொள்வதாக கூறி 10 ஆண்டுகளாக பாலியல் உறவில் இருந்ததாகவும், தற்பொழுது அவர் திருமணம் செய்து கொள்ள மறுப்பதாகவும் புகார் அளித்திருந்தார்.

இதையடுத்து அந்த நபர் மீது போலீசார் பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்தனர். இதை எதிர்த்து கேரள உயர்நீதிமன்றத்தில் அந்த நபர் மனுத்தாக்கல் செய்தார்.

திருமணமானவருடன் பெண் உல்லாச உறவு - இது பாலியல் வன்கொடுமை கிடையாது நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு | A Woman Flirts With A Married Man Court Verdict

மனுவை விசாரணைக்கு வந்த போது தனக்கு திருமணம் ஆனது தெரிந்தே இசைக்குழுவில் இருந்த பெண், தன்னுடன் பாலியல் உறவில் இருந்ததாகவும், தன் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதி, இந்த வழக்கை திருமண உறுதிமொழி குற்றச்சாட்டாக சேர்க்க முடியாது என்றார். காதல் என்ற பெயரில் உறவில் இருந்ததால், பாலியல் வன்கொடுமை ஆகாது என்ற நீதிபதி, மனுதாரர் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.