பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்..வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த அவலம்!

Viral Video Uttar Pradesh India Crime
By Swetha Aug 16, 2024 03:56 AM GMT
Report

மருத்துவமனையில் வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அறுவை சிகிச்சை 

உத்தரப் பிரதேசத்தில் பஸ்தி மாவட்டத்தின் ஹர்தயா பகுதியில் இயங்கி வரும் பஸ்தி மல்டி ஸ்பெஷாலிட்டி தனியார் மருத்துவமனை ஒன்றில் பெண்ணுக்கு வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்யும் வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்..வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த அவலம்! | A Ward Boy Does Operation On A Woman In A Hospital

ஆபரேஷன் தேட்டரில் நிர்வாணமாக மயக்க நிலையில் இருந்த பெண்ணுக்கு மருத்துவர்களுடன் சேர்ந்து வார்டு பாய் அறுவை சிகிச்சை செய்து அதை வீடியோ எடுத்து தனது வாட்ஸப் ஸ்டேட்டஸாக வைத்துள்ளான். அந்த அதிர்ச்சிகரமான வீடியோ வைரலாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை : சேலம் மருத்துவர்கள் சாதனை

ரத்தமின்றி நவீன அறுவை சிகிச்சை : சேலம் மருத்துவர்கள் சாதனை

வார்டு பாய்

அந்த மருத்துவமனையின் இயக்குனர் சஞ்சய் குமாரின் வழிகாட்டுதலின்படியே தான் அறுவை சிகிச்சையில் ஈடுபட்டதாக வார்டு பாய் தெரிவித்துள்ளார். ஆனால் இந்த கருத்தை மருத்துவ நிர்வாகம் மறுத்துள்ளது.

பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்த வார்டு பாய்..வீடியோ எடுத்து ஸ்டேட்டஸ் வைத்த அவலம்! | A Ward Boy Does Operation On A Woman In A Hospital

மேலும் இந்த விவகாரத்தை உரிய முறையில் விசாரித்து கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசாரும் தீவிரமாக விசாரனை நடத்தி வருகின்றனர்.