Wednesday, Jun 18, 2025

ஆண்கள் உள்ளே வரக்கூடாது..! பெண்கள் மட்டும் வாழும் விநோத கிராமம்

Syria
By Thahir 2 years ago
Report

சிரியாவில் ஆண்கள் இல்லாமல் பெண்கள் மட்டும் வாழும் கிராமம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. 

பெண்கள் மட்டும் வசிக்கும் கிராமம் 

ஆண்கள் துணையின்றி வாழ முடியுமா என பலரும் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருவார்கள். ஆனால் இன்றைய காலகட்டத்தில் பெண்கள் தனியாக வாழ்ந்து காட்டி வருகின்றனர்.

அந்த வகையில்,சிரியாவில் உள்நாட்டு போர் உட்பட பல்வேறு பிரச்சனைகள் நடந்து வருகின்றன. இதனால் நிலவும் அரசியல் குழப்பம் காரணமாக மக்களும் பல்வேறு பிரச்சனைகளை சந்திக்கின்றனர்.

A village inhabited only by women

இந்நிலையில் வடக்கு சிரியாவில் இருக்கும் ஜின்வார் கிராமத்தில் பெண்கள் மட்டுமே வசித்து வருகிறார்கள். போர் மற்றும் வன்முறை காரணமாக பாதிக்கப்பட்ட பெண்கள் தனியாக கிராமத்தை உருவாக்கி வசித்து வருகின்றனர்.

A village inhabited only by women

இங்கு ஆதரவற்ற பெண்கள் மட்டும் வசித்துக்கொள்ள அந்த கிராமத்தினர் அனுமதி வழங்குகின்றனர். இங்கு வசிக்கும் பெண்கள் தங்களுக்கு தேவையானவற்றை தாங்களே செய்து கொள்கின்றனர்.மேலும் ஆண்கள் யாரும் அந்த கிராமத்தில் வாசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.