ரசிகரின் சூப்பர் பைக்கை கண்டதும் 'எம்எஸ் தோனி' செய்த காரியம் - வைரலாகும் Video!

Jiyath
in கிரிக்கெட்Report this article
முன்னாள் இந்திய அணி கேப்டன் எம்எஸ் தோனியின் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
எம்.எஸ்.தோனி
இந்திய கிரிக்கெட் அணியின் மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராக திகழ்பவர் எம்.எஸ். தோனி. இந்திய அணிக்காக டி20, ஒரு நாள் கிரிக்கெட், சாம்பியன்ஸ் டிராபி, ஆசியக் கோப்பை ஆகியவற்றை வென்று கொடுத்துள்ளார்.
கடந்த 2020ம் ஆண்டு கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றார் தோனி. ஆனால் ஐபிஎல்-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். தற்போது நண்பர்கள், குடும்பத்தினருடன் நாடு முழுவதும் பயணம் சென்று தனது பொன்னான நேரத்தை அனுபவித்து வருகிறார்.
நெகிழ்ச்சி செயல்
மேலும், தன்னை சந்திக்கும் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொள்வது, ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுப்பது போன்ற செயல்களை செய்து வருகிறார்.இந்நிலையில் ரசிகர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கிணங்க, அவரின் சூப்பர் பைக்கிற்கு தோனி ஆட்டோகிராஃப் போட்டுக்கொடுத்துள்ளார்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், தோனி அந்த பைக்கின் ஹெட்லைட்டை தனது டி-ஷர்ட்டால் நன்றாக துடைத்துவிட்டு, இங்கே, இந்த இடத்தில் ஆட்டோகிராஃப் போடுகிறேன் என்று எழுதிக் காண்பித்து, ஆட்டோகிராஃப் போட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த சூப்பர் பைக்கில் அமர்ந்து ஸ்டார்ட் செய்து ரசிகருடன் போஸ் கொடுத்துள்ளார்.
MS Dhoni and his love for bikes ?#MSDhoni #WhistlePodu
— WhistlePodu Army ® - CSK Fan Club (@CSKFansOfficial) November 25, 2023
? Sumeet Kumar pic.twitter.com/veGbBS16UO