அஜித்,சிவாஜியை இயக்க மாட்டேன்; துரோகம் செய்ய முடியாது - வெளிப்படையாக கூறிய இயக்குனர்!
சிவாஜி கணேசன், நடிகர் அஜித் இணையவிருந்த படம் குறித்த செய்திகள் வெளியாகியுள்ளது.
சிவாஜி - அஜித் இணையவிருந்த படம்
சரத்குமார் நடித்த மகா பிரபு என்ற திரைப்படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானவர் ஏ வெங்கடேஷ். இவரின் இந்த முதல் படத்தை நடிகர் விஷாலின் தந்தை ஜிகே ரெட்டி தயாரித்தார். இந்த படம் வெற்றி பெற்றது.
அதனைத்தொடர்ந்து சில படங்களை இயக்கிய ஏ வெங்கடேஷ் பூப்பறிக்க வருகிறோம் என்ற படத்தை இயக்கவிருந்தார். இந்த படத்தில் சிவாஜி கணேசன் நடித்தால் நன்றாக இருக்கும் என்று எண்ணினார் வெங்கடேஷ்.
தனது முதல் வெற்றிப் படத்தின் தயாரிப்பாளரான ஜிகே ரெட்டியிடம் கதையைக் கூறினார். கதையைக் கேட்ட தயாரிப்பாளர் அதற்கு ஓகே சொல்லவிட்டு சிவாஜி கணேசனுக்கு எவ்வளவு சம்பளம் வேண்டுமானாலும் கொடுத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார்.
இதையடுத்து சிவாஜி கணேசனிடம் கதை சொல்ல போயிருக்கிறார். அவருடன் சிவாஜிக்கு மிகவும் நெருக்கமான சிவி ராஜேந்திரன் அவர்களையும் அழைத்துச் சென்றுள்ளார். கதையைக் கேட்ட சிவாஜி படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டுவிட்டு படத்தின் கதாநாயகன் யாரென்று கேட்டிருக்கிறார்,.
அதற்கு தயாரிப்பாளரின் மூத்த மகன் அஜய் என்று வெங்கடேஷ் பதிலளித்துள்ளார். இதைக்கேட்ட சிவாஜி படப்பிடிப்பு தேதியை மட்டும் சொல்லுங்கள் என்று கூறியிருக்கிறார். இதனைத் தொடர்ந்து பூப்பறிக்க வருகிறேன் என்ற படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டு படப்பிடிப்பு பணிகளும் விறுவிறுப்பாக நடந்து வந்தது.
பின்னர் ஒருநாள் இயக்குநரை அழைத்த சிவி ராஜேந்திரன் இந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது இதை நானே தயாரிக்கிறேன். படத்தில் அஜய்க்கு பதிலாக அஜித்தை ஹீரோவாக போடலாம் என்றும் நடிகர் அஜித்திடம் நான் கால்ஷீட் வாங்கி தருவதாகவும் கூறியிருக்கிறார்.
துரோகம் செய்ய முடியாது
இதனைத்தொடர்ந்து இரவு முழுவதும் யோசித்த ஏ வெங்கடேஷ் அடுத்தநாள் சிவி ராஜேந்திரனை சந்தித்து "தனக்கு முதல் வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர் ஜிகே ரெட்டிக்கு துரோகம் செய்ய முடியாது. தான் கொடுத்த வாக்கின் படியே அஜய் சிவாஜி கணேசன் நடிப்பில் தான் படத்தை இயக்க இருப்பதாகவும், அஜய்யை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இதனைத்தொடர்ந்து சிவாஜி கணேசன், அஜய், மாளவிகா, ரகுவரன், எம்என் நம்பியார், சின்னி ஜெயந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் இந்த படம் கடந்த 1999 ஆம் ஆண்டு செப்டம்பர் 17ஆம் தேதி வெளியானது. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெறாவிட்டாலும் சிறிய அளவில் தயாரிப்பாளருக்கும் விநியோகஸ்தர்களுக்கு லாபம் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்திகளின் உண்மைத்தன்மை குறித்த அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. இது ரசிகர்களிடையே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது .