சாலையில் சென்ற வாகன ஓட்டியின் மீது முறிந்து விழுந்த மரம் - பதைபதைக்கும் CCTV காட்சி
மன்னார்குடி முன்னாள் ராணுவ வீரர் இரண்டு சக்கர வாகனத்தில் சென்றபோது அவர் மீது சாலையோரம் உள்ள பணைமரம் முறிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில பரவி வருகிறது .
மரம் முறிந்து விழுந்து விபத்து
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி வஉசி ரோட்டை சேர்ந்த வெங்கடாசலம் (50).
முன்னாள் ராணுவ வீரரான இவர் தற்போது கோட்டூர் அடுத்த களப்பால் ஓஎன்ஜிசி பிளாண்ட்டில் பாதுகாவலராக வேலை பார்த்து வருகிறார்.
காலை வெங்கடாசலம் தனது வீட்டில் இருந்து திருமக்கோட்டை ரோடு வழியாக களப்பால் கிராமத்தில் உள்ள ஓஎன்ஜிசி அலுவலகத்திற்கு இருசக்கர வாகனத்தில் சென்றார்.
மேல மறவாக்காடு பகுதி அருகே சென்ற போது சாலையோரத்தில் இருந்த பனைமரம் ஒன்று முறிந்து பைக்கில் சென்ற வெங்கடாசலம் மீது விழுந்தததும் அவர் காயமடைந்து கீழே விழுந்தார்.

அப்போது அவ்வழியே சென்ற சிலர் முன்னாள் ராணுவ வீரர் வெங்கடாசலத்தை மீட்டு மன்னார்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
பதைபதைக்கும் CCTV காட்சி
அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மேல்சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து மன்னார்குடி டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னாள் ராணுவ வீரர் மீது சாலையோரம் உள்ள பணைமரம் முறிந்து விழும் சிசிடிவி வீடியோ காட்சி சமூக வலைதளங்களில வேகமாக பரவி வருகிறது.