Thursday, Jul 10, 2025

ஒன்றரை வருடத்தில் கசந்த காதல்..! கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு - அனாதையான குழந்தை

Tamil nadu Tamil Nadu Police Marriage Death
By Thahir 2 years ago
Report

காதல் திருமணம் செய்த கணவன், மனைவி ஒன்றரை வருடத்தில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கசந்துபோன காதல் திருமணம் 

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே சோத்தக்குடி பகுதியை சேர்ந்த சிவனேசன் மகன் சுபாஷ் வயது 25.இவர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் சுபாஷ் கடந்த சில வருடங்களாக அதே பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகள் அஷ்டலட்சுமி வயது 20 என்கிற பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

இந்த நிலையில் இவர்களின் காதலுக்கு இருவீட்டு பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடந்த ஒன்றரை வருடத்திற்கு முன்பு சுபாஷ் அஷ்டலட்சுமியை அழைத்துச் சென்று வெளியூரில் திருமணம் செய்து கொண்டுள்ளார்.

இதனையடுத்து சோத்தக்குடி வந்த சுபாஷ் அஷ்டலட்சுமி தம்பதியினர் தனியாக வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்துள்ளனர் இந்த தம்பதியினருக்கு 3 மாத ஆண் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில் கணவன் மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. சுபாஷ் தினமும் குடித்துவிட்டு வந்து அஷ்டலட்சுமியிடம் சண்டையிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் தொடர்ந்து மன உளைச்சலில் இருந்து வந்த அஷ்டலட்சுமி நேற்று இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒன்றரை வருடத்தில் கசந்த காதல்..! கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு - அனாதையான குழந்தை | A Tragic Decision Taken By The Husband And Wife

கணவன், மனைவி தற்கொலை 

தொடர்ந்து குழந்தையின் அழுகின்ற குரல் கேட்டு அக்கம் பக்கத்தினர் அஷ்டலட்சுமியை கூப்பிட்டு பார்த்து கதவை தட்டியுள்ளனர்.

கதவை திறக்காத நிலையில் வீட்டின் கதவை உடைத்து பார்த்ததில் அஷ்டலட்சுமி தூக்கு போட்ட நிலையில் இருந்து உள்ளார்.

இந்த நிலையில் வேலைக்கு சென்று இருந்த சுபாஷ் தகவல் அறிந்து வீட்டுக்கு வந்துள்ளார். அருகில் உள்ள பருத்திக் கொள்ளைக்கு சென்ற சுபாஷ் அங்கு மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

ஒன்றரை வருடத்தில் கசந்த காதல்..! கணவன் மனைவி எடுத்த விபரீத முடிவு - அனாதையான குழந்தை | A Tragic Decision Taken By The Husband And Wife

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் இருவரது உடலையும் காவல்துறையினர் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.