திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் முழ்கிய கிராமம்

Death Tirunelveli
By Thahir Jan 22, 2023 07:32 AM GMT
Report

சமையல் செய்ய கற்றுக்கொள் என இளம் பெண்ணை அவரது தாய் அறிவுறுத்திய நிலையில் இந்த இளம் பெண் எடுத்த விபரீத முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொழில்நுட்ப வளர்ச்சியால் தொடரும் விளைவுகள் 

இன்றைய அதிநவீன காலகட்டத்தில் செல்போன் பயன்பாடு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இளைய தலைமுறை அதிகம் பயன்படுத்தும் சாதனம் செல்போன் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே.

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது தினம் தினம் முன்னேற்ற பாதையில் சென்றாலும் அதன்பயன்பாடுகள் ஒருபக்கம் கடும் விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது.

அதன் ஒரு பகுதியாக அதிக நேரம் செல்போனில் முழ்கிய இளம்பெண் ஒருவர் எடுத்த விபரீத முடிவு குடும்பத்தினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செல்போனில் முழ்கிய இளம்பெண் 

திருநெல்வேலி மாவட்டம், கீழகோடான்குளம் பகுதியைச் சேர்ந்தவர் குப்புராஜ் இவரது மகள் கிறிஸ்டில்லா மேரி. கல்லுாரி பயின்று வரும் அவருக்கு பெற்றோர் திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர்.

இதையடுத்து அதே பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கிறிஸ்டில்லா மேரிக்கு ஜனவரி 1ம் தேதி திருமண நிச்சயத்தார்த்தம் நடந்து முடிந்துள்ளது.

திருமணத்திற்கான ஏற்பாடுகளை பெற்றோர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், இளம் பெண் கிறிஸ்டில்லாவோ சமூக வலைத்தளத்தில் முழ்கி கிடந்துள்ளார்.

தாயின் அறிவுரையால் விபரீத முடிவு 

நேற்று முன்தினம் கிறிஸ்டில்லா தனது செல்போனில் இன்ஸ்டாகிராம் ஸ்டோரீஸ் பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

இதை கண்ட அவரின் தாய் இன்னும் ஒரு வாரத்தில் உனக்கு திருமணம் நடக்க உள்ளது. ஆனால் உனக்கு எந்த வீட்டு வேலையும் செய்ய தெரியவில்லை.

இப்படியே போனால் மாப்பிள்ளை வீட்டில் என்ன செய்வாய் ஒழுங்காக சமையல் வேலைகளை எல்லாம் கற்றுக்கொள் என கண்டித்துள்ளார்.

இதனால் விரக்தி அடைந்த கிறிஸ்டினா மேரி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் வயலுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

திருமணம் நிச்சயக்கப்பட்ட நிலையில் இளம் பெண் எடுத்த விபரீத முடிவு - சோகத்தில் முழ்கிய கிராமம் | A Tragic Decision Made By A Young Woman

இதனால் அதிர்ந்து போன அவரது பெற்றோர் கதறி துடித்து தனது மகளை அரசு மருத்துவமனையில் சிகிசசைக்காக அனுமதித்தனர்.

சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு 

இதையடுத்து உடல் நலம் மோசமடைந்த நிலையில் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இரண்டு நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த நிலையில் கிறிஸ்டில்லா சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திருமணத்திற்கு ஒரு வாரமே உள்ள நிலையில், இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.