ராஜக்களுக்கு நடக்கும் பாரம்பரிய முறைப்படி திருமணம்!
Marriage
Erode
By Thahir
ராஜாக்களின் பாரம்பரிய முறையை பின்பற்றி நடைபெற்ற திருமணம் ஈரோட்டில் அனைவரின் கவனத்தை ஈர்த்தது.
குதிரை வண்டியில் மணமக்கள்
ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சியில் கிருஷ்ண சங்கர்- அழகு ராணி ஆகியோரின் திருமணம் நேற்று நடைபெற்றது.
அப்போது மணமக்கள் இருவரும் குதிரை வண்டியில் திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.
இதைப் பார்த்து சாலைகளில் சென்றவர்கள் ஆச்சரியத்துடன் பார்த்தனர்.
பாரம்பரிய முறைப்படி திருமணம்
இதன் பின்னர் திருமணம் முடிந்த பிறகும் மணமக்கள் இருவரும் குதிரை வாகனத்தில் அழைத்துச் செல்லப்பட்டனர்.
ராஜாக்களின் பாரம்பரிய முறையை பின்பற்றி நடைபெற்ற திருமணம் அந்த பகுதியை மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.