பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அணி த்ரில் வெற்றி

Hardik Pandya Indian Cricket Team
By Thahir Jan 04, 2023 04:18 AM GMT
Report

இலங்கை அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 3 டி-20 மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியா வந்துள்ளது.

இந்தியா அணி த்ரில் வெற்றி 

இரு அணிகள் மோதும் முதல் டி-20 போட்டி மும்பையின் வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்ற இலங்கை அணி, முதலில் பௌலிங் தேர்வு செய்தது.

பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா அணி த்ரில் வெற்றி | A Thrilling Victory For India In Sensational Match

முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்களை எடுத்தது. இதனைத்தொடர்ந்து களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட்டை இழந்து 160 ரன்களை எடுத்து 2 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.