11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் - அதிரடி உத்தரவிட்ட நீதிமன்றம்..!
ஸ்ரீவில்லிபுத்தூர் 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் உத்தரவிட்டது.
சிறுமிக்கு பாலியல் தொல்லை
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அமீர்பாளையத்தை சேர்ந்தவர் வைரமுத்து வயது 25.கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவர் கடந்த 2019 ம் வருடம் பஜாரில் நடந்து வரும்போது 11 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகார் அடிப்படையில்,
சாத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து வைரமுத்துவை கைது செய்து ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்று வந்த வழக்கை விசாரித்த நீதிபதி பூர்ண ஜெயஆனந்த் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட தொழிலாளி வைரமுத்துக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் ரூபாய் 5000 அபதாரம் விதித்து தீர்ப்பு கூறினார்.மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 3 லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு வழங்க தமிழக அரசுக்கு நீதிபதி பரிந்துரை செய்தார்.
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தொழில் அதிபரிடம் விசாரணை..!