வகுப்பறையில் மாணவிகளுக்கு ஆபாச பாடம் எடுத்த ஆசிரியர்
கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் உள்ள மாணவர்களை வெளியில் அனுப்பி விட்டு மாணவிகளுக்கு மட்டும் ஆபாச பாடம் எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன அதிலும் குறிப்பாக பெண்கள் மீதான பாலியல் தொடர்பான அத்துமீறல்களும் அதிகரித்து வருகிறது.
பெரும்பாலும் பள்ளி கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளே அதிக அளவில் பாலியல் அத்துமீறலுக்கு உள்ளாக்கப்பட்டு பாதிக்கப்படுகின்றனர்.
இந்த நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் என்ற பகுதியில் உள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் 11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களை வெளியில் அனுப்பி விட்டு மாணவிகளுக்கு ஆபாச பாடம் நடத்தியுள்ளார்.
இதையடுத்து மாணவிகள் பெற்றோர்களின் உதவியுடன் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர் புகாரின் பேரில் ஆசிரியரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குழந்தைகள் உதவி மைய அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டு அவர்களும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்