வகுப்பில் மாணவனின் டவுசரை கழட்டிய ஆசிரியர் - அந்தரங்க உறுப்பில் ஏற்பட்ட வலியால் கதறிய மாணவன்..!
அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் ஒருவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதுள்ளனர்.
மாணவனுக்கு தனி அறையில் நிகழ்ந்த பயங்கரம்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அடுத்துள்ள கண்ணாட்டுவிளை பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு இயற்பியல் ஆசிரியராக பணியாற்றி வருபவர் அருள்ஜீவன் (47).
இந்த பள்ளியில் 8 வகுப்பு ஒன்றில் ஆலங்கோடு பகுதியைச் சேர்ந்த 13 வயது மாணவன் படித்து வந்தான். இந்த நிலையில் கடந்த 14ம் தேதியன்று மாணவன் மதிய உணவு சாப்பிட்டு விட்டு சிறுநீர் கழிப்பதற்காக கழிவறைக்கு சென்று திரும்பியுள்ளான்.
அப்போது அங்கு வந்த ஆசிரியர் அருள் ஜீவன் மாணவனின் தோளில் கை போட்டுக் கொண்டு பேசிய படி அறிவியல் ஆய்வகத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்து மாணவனுக்கு ஆசிரியர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனால் சிறுவனின் உறுப்பில் வலி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
தலைமறைவான ஆசிரியர்
வலி தாங்க முடியாத சிறுவன் நடந்த சம்பவத்தை தனது தந்தையுடம் கூறி அழுத்துள்ளான். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த பெற்றோர் தலைமை ஆசிரியரிடம் புகார் அளித்துள்ளனர்.
புகாரை கண்டு கொள்ளாமல் தலைமை ஆசிரியர் நடவடிக்கை எடுக்காமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து இச்சம்வம் பற்றி குளச்சல் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பாக போலீசார் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர். இதையடுத்து ஆசிரியர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டதை அறிந்த ஆசிரியர் தலைமறைவாகியுள்ளார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.