இது என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத நாள் : அஜாஸ் படேல் பெருமிதம்

india ajazpatel newzealandindia
By Irumporai Dec 05, 2021 05:35 AM GMT
Report

இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில் நியூசிலாந்து வீரர் அஜாஸ் படேல் இந்திய அணியின் 10 விக்கெட்டுகளை கைப்பற்றி சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், தனது சாதனை குறித்து அவர் கூறுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று என தெரிவித்தார்.

இதுதொடர்பாக அஜாஸ் படேல் கூறுகையில், எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மிகச்சிறந்த நாட்களில் இதுவும் ஒன்று. உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இதை என்னால் நம்ப முடியவில்லை.

இந்தச் சாதனையை மும்பையிலேயே (பிறந்த ஊர்) நிகழ்த்திய வகையில் நான் அதிர்ஷ்டசாலி. நிச்சயம் எனக்கு மட்டுமல்ல, எனது குடும்பத்துக்கும் இது மிகவும் சிறப்பு வாய்ந்த தருணமாகும். ஆனால் துரதிர்ஷ்டவசமாக கொரோனா கட்டுப்பாடு காரணமாக அவர்கள் இங்கு வர முடியவில்லை.

இது என்னோட வாழ்க்கையில மறக்க முடியாத நாள் : அஜாஸ் படேல் பெருமிதம் | A Surreal Bittersweet Day For Mumbai S Ajaz Patel

முந்தைய நாள் இரவில் வான்கடே ஸ்டேடியத்தில் இன்னிங்சில் 5 விக்கெட் வீழ்த்தும் வீரர்களின் பெயரைப் பதித்து பெருமைப்படுத்தும் போர்டை பார்த்தேன். அதில் எனது பெயரும் இடம் பெற வேண்டும் என விரும்பினேன். ஆனால் இப்படிப்பட்ட சிறப்புகளோடு இணையும் என்று எதிர்பார்க்கவில்லை.

இதற்கு முன் கும்ப்ளே 10 விக்கெட்டுகள் வீழ்த்திய வீடியோ காட்சிகளை பலமுறை பார்த்துள்ளேன். அவரது கனிவான வார்த்தைகளும், பாராட்டும் நெகிழ வைக்கிறது. 10 விக்கெட் சாதனை பட்டியலில் அவருடன் பணிவோடு இணைகிறேன் என தெரிவித்துள்ளார்.