திடீரென உயர்ந்த தங்கம் விலை - ஷாக்கான இல்லத்தரசிகள்!
தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தங்கள் விலை உயர்வு
இந்தியா பொருளாதாரத்தில் உயர்ந்து வந்தாலும் அதன் சந்தை வர்த்தகங்கள் மற்றும் தங்கம், வெள்ளி விலை ஆனது அவ்வப்போது சரிந்தும் ஏற்றம் கண்டும் வருகிறது. அதுபோல், கடந்த வாரம் தங்கம் விலை கடும் சரிவை கண்டதால் நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
இந்த நிலையில், தீபாவளி முடிந்ததும் இந்த வார தொடக்க நாளில் இருந்து இன்று வரை தங்கம் விலை உச்சம் தொட்டு வருகிறது. அந்த வகையில், ஒரு சவரன் தங்கம் விலை நேற்று ரூ.44,920ஆக இருந்த நிலையில், இன்று சவரனுக்கு ரூ.240 உயர்ந்துள்ளதால் இல்லத்தரசிகள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள்.
இன்றைய விலை நிலவரம்
அதன்படி, சென்னையில் (15.11.2023) இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை, சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.45.160க்கும், கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ரூ.5,645க்கும் விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.70 உயர்ந்து ரூ.77.70க்கும், கிலோ வெள்ளி ரூ. 77,700க்கும் விற்பனையாகிறது.
(14.11.2023) நேற்றைய நிலவரப்படி, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலைசவரனுக்கு ரூ.200 அதிகரித்து ரூ.44,920க்கும், கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ரூ.5,615க்கும் விற்பனையானது. அதேபோல், வெள்ளியின் விலை கிராமுக்கு 60 காசுகள் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.76.00க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.76,000 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.