மத்திய அமைச்சரவையில் திடீர் மாற்றம் - காரணம் என்ன?
Narendra Modi
Government Of India
By Thahir
மத்திய அமைச்சர்களின் இலாகாக்களை பிரதமர் மோடி தலைமையிலான அரசு மாற்றம் செய்துள்ளது.
மத்திய அமைச்சரவையில் மாற்றம்
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் சட்டத்துறை அமைச்சராக இருந்து வந்தவர் கிரண் ரிஜ்ஜு. கடந்த 2019 ஆம் ஆண்டு அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்ட போது மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

சமீபகாலமாக நீதிபதிகளுக்கும் இவருக்கும் கருத்து வேறுபாடு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் சட்டத்துறை அமைச்சராக இருந்த கிரண் ரிஜ்ஜு புவி அறிவியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து இந்திய கலாச்சாரத்துறை இணை அமைச்சராக இருந்த அர்ஜுன் ராம் மேக்வால் புதிய சட்டத்துறை அமைச்சராக பதவியேற்றுள்ளார்.