இன்று மாலை உருவாகிறது புயல் - தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

Chennai Tiruchirappalli
By Thahir Dec 07, 2022 09:38 AM GMT
Report

இன்று மாலை உருவாகும் புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

மாலை உருவாகிறது புயல் 

சென்னை தென் கிழக்கு பகுதியில் 770கிமீ தூரத்திலும், காரைக்கால் கடற்கரையில் இருந்து 690கிமீ தூரத்திலும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது.

A storm is forming this evening

அது இன்று மாலை மேற்கு வடமேற்கு திசையில் நகரும் எனவும் , இன்று மாலை புயலாக மாறக்கூடும் எனவும் வானிலை ஆய்வ மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

கனமழை பெய்ய வாய்ப்பு 

அவர் மேலும் கூறுகையில், 8,9,10 ஆகிய தேதிகளில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அநேக இடங்களில் கனமழை பெய்யும் எனவும், 8 ஆம் தேதி கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களில் அதிகனமழை பெய்யும் எனவும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம் , கள்ளகுறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்து 9ஆம் தேதி திருவள்ளூர், ராணிபேட்டை, வேலூர், கள்ளக்குறிச்சி, திருச்சி , சேலம், தர்மபுரி, திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் , 9ஆம் தேதி புதுச்சேரி, விழுப்புரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் அநேக இடங்களில் ஆதி கனமழை பெய்ய வாய்ப்பு எனவும் தெரிவித்துள்ளார்.

காற்றின் அளவை பொறுத்த வரையில் 8,9,10 ஆகிய தேதிகள் கடலோர பகுதிகளில் காற்று வீசும் எனவும், 8ஆம் தேதி மாலை முதல் 9 மாலை வரையில் வடதமிழகம் பகுதிகளில் 50-60 கிமீ வேகத்தில் காற்றும் வீசும் எனவும், 10ஆம் தேதியில் 70- 80 கிமீ காற்று வீசும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு தமிழக கடலோரபகுதிகளில் 8 முதல் 9ஆம் தேதிகளில் 40 முதல் 50 கிமீ காற்றும் 10 ஆம் தேதி 50 -60கிமீ வரையில் காற்று வீசக்கூடும் எனவும், கடல் கொந்தளிப்புடனும் இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் சார்பில் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார் .

10 ஆம் தேதி வரையில் மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும், இந்த புயலானது புதுச்சேரி முதல் ஸ்ரீஹரிகோட்டா இடைப்பட்ட பகுதியில் கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. என வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.