நிதியுதவி வழங்கும் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் - 85 பேர் உயிரிழப்பு
ஏமன் நாட்டில் நிதியுதவி வழங்கும் விழாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 85 பேர் உயிரிழந்தனர்.
85 பேர் உயிரிழப்பு - 332 பேர் படுகாயம்
இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 100க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். ஏழை நாடாக கருதப்படும் ஏமனில் உள்நாட்டு போரால் பொருளாதாரம் சீர்குலைந்து போயுள்ளது.
இந்த நிலையில் ரமலானை முன்னிட்டு அறக்கட்டளை ஒன்று ஏழைகளுக்கு நிதி உதவி வழங்கும் நிகழ்ச்சியை நடத்தியது.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க பொதுமக்கள் முண்டியடித்தால் ஏற்பட்ட நெரிசலில் 85 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கானோர் திரண்டதால் 322 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும் இந்த கூட்டத்தை கட்டுப்படுத்த ஹவுதி கிளர்ச்சி கும்பல், வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டது. இதனால் அச்சமடைந்த மக்கள் சிதறி ஓடினர். இதுவும் 85 பேர் உயிரிழப்புக்கு காரணம் என்று கூறப்படுகிறது.
