400 ஆண்டுகளுக்கு பிறகு நிகழும் அதிசய சூரியகிரகணம் - அனைவரும் பார்க்க முடியுமா?
Australia
By Thahir
பல ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வரும் சூரியகிரகணம் இன்று நிகழ உள்ள நிலையில், இந்நிகழ்வை நாசா தனது யூடியூப் பக்கத்தில் நேரலையாக ஒளிபரப்புகிறது.
கலப்பின கிரகணம்
சூரிய கிரகணம் என்பது பூமிக்கும் சூரியனுக்கும் இடையே சந்திரன் வரும்போது நிகழும், முழு கிரகணம், பகுதி கிரகணம்,வளைய கிரகணம், வளைய மற்றும் முழு கிரகணம் என நான்கு வகையான சூரிய கிரகணம் உள்ளன. இவை நான்கும் இணைந்த கலப்பின சூரிய கிரகணம் இன்று நிகழ்கிறது.

இந்த கலப்பின சூரிய கிரகணம் 400 ஆண்டுக்கு பிறகு இன்று நிகழ்கிறது, இவை இந்திய நேரப்படி காலை 7.04 மணிக்கு தொடங்கும் என்றும், இதனை இந்தியாவில் காண முடியாது என்றும் கூறியுள்ளனர். இந்நிலையில் ஆஸ்திரேலியா மற்றும் பசுபிக் பெருங்கடல் பகுதிகளில் காணலாம் என்றும் கூறியுள்ளனர்.