சரக்குகளுடன் சேர்ந்து விமானத்தில் பறந்த பாம்பு - விசாரணைக்கு உத்தரவு
Dubai
By Thahir
விமானத்தில் சரக்குபெட்டகம் இருக்கும் இடத்தில் பாம்பு இருந்த நிலையில் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
விமானத்தில் பாம்பு
ஏர் இந்தியா விமானத்தில் பாம்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கேரளாவின் கோழிக்கோட்டில் இருந்து துபாய் நோக்கி புறப்பட்டு நேற்று துபாய் சர்வதேச விமான நிலையம் சென்றடைந்தது.

அப்போது விமானத்தில் சரக்கு பெட்டகம் வைக்கும் பகுதியில் சரக்குகளை எடுத்த போது பாம்பு இருந்தது கண்டறியப்பட்டது.
இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தர சிவில் விமான போக்குவரத்துறை இயக்குநர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.