'சிஎம் தாத்தா நான் டெய்லி ஸ்கூலுக்கு லேட் ஆ போறேன் பாலம் கட்டித்தாங்க' - முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த சிறுமி
சிவகாசியைச் சேர்ந்த பள்ளி சிறுமி ஒருவர் ரெயில்வே கேட் போடுவதால் தான் தினமும் பள்ளிக்கு தாமதமாக செல்வதால் பாலம் கட்டித்தர சொல்லி கேட்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்த பள்ளி சிறுமி
அந்த வீடியோவில், சி.எம்.தாத்தா நான் சிவகாசியில் இருந்து பேசுறேன் தாத்தா...எங்க சிவகாசியில சீக்கிரம் பாலம் கட்டுங்க...நான் டெய்லியும் லேட்டா போறேன் தாத்தா...ரெயில்வே கேட் போட்டுறாங்க தாத்தா...என்று மழலை மொழியில் சிறுமி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை சிறுமியின் பெற்றோர் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
சிவகாசி : 'சி.எம். தாத்தா சீக்கிரம் பாலம் கட்டுங்க தாத்தா'
— DON Updates (@DonUpdates_in) February 2, 2023
முதலமைச்சருக்கு மழலை மொழியில் கோரிக்கை வைத்த பள்ளிச் சிறுமி pic.twitter.com/Z8i37kGC8T

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.