மது குடித்துக் கொண்டே காரில் உல்லாசமாக வந்த காதல் ஜோடி - போலீசார் காட்டிய அதிரடி
சென்னைியில் மது போதையில் கார் ஓட்டி வந்த காதல் ஜோடியை பிடித்து போலீசார் அபராதம் விதித்தனர்.
மது அருந்திவிட்டு கார் ஓட்டிய ஜோடி
சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டு இருந்தனர். அப்பொழுது அந்த வழியாக கார் ஒன்று வந்துள்ளது.
அந்த காரில் ஒரு இளம் பெண் மற்றும் அவரது ஆண் நண்பர் இருவரும் பயணித்து வந்தனர். காரை ஆண் நண்பர் ஓட்டி வந்த நிலையில் அவரை பரிசோதித்த போது அந்த ஆண் நண்பர் குடித்திருப்பது தெரியவந்துள்ளது.

போலீசார் அதிரடி
இதை தொடர்ந்து பெண்ணையும் சோதனை செய்த போது அவரும் மது அருந்தியிருந்தது உறுதியானது. இதனைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ஆவணங்களை பெற்ற போலீசார் மது அருந்திவிட்டு வாகனம் இயக்கியதற்காக அபராதம் விதித்துள்ளனர்.
பின்னர் அவர்கள் மது அருந்தியதால் காரை எடுத்துச் செல்ல போலீசார் அனுமதிக்கவில்லை.
எனவே ஆத்திரமடைந்த அந்த இளம் பெண் தனது ஆண் நண்பருடன் சண்டை போட்டுவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்றுள்ளார்.  
 
                     
                                                 
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    