பாலைவன மணலில் சாலைகள் அமைக்கும் புதிய தொழில்நுட்பம்
ஜப்பானின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனமான ஹோண்டா, கட்டுமானத் துறையில் நீண்டகாலமாக இருந்த ஒரு பெரிய பிரச்சனைக்கு புதிய தீர்வை அறிமுகப்படுத்தியுள்ளது.
ரைசிங் சாண்ட் என்ற இந்த புதிய தொழில்நுட்பம் மூலம், இதுவரை கட்டுமானத்திற்கு பயன்படுத்த முடியாத பாலைவன மணலை சாலைகள் அமைக்க பயன்படுத்த முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பொதுவாக, கட்டுமானப் பணிகளில் ஆற்று மணல் மற்றும் கற்களை உடைத்து பெறப்படும் மணல் பயன்படுத்தப்படுகிறது.
ஆனால் பாலைவன மணல் துகள்கள் மிகவும் நுணுக்கமாகவும், உருண்டையாகவும் இருப்பதால் சிமெண்டுடன் நன்றாக ஒட்டாது. இதனால் கட்டுமானத்தின் வலிமை குறைகிறது.
இதற்காக, ஹோண்டாவின் பாத்ஏஹெட் என்ற ஸ்டார்ட்-அப், பாலைவன மணலை செயற்கை ஜல்லிகளாக மாற்றும் புதிய முறையை உருவாக்கியுள்ளது.
இந்த முறையில், மணல் துகள்கள் கடினமான மற்றும் ஒழுங்கான வடிவமாக மாற்றப்படுகின்றன.

இந்த ரைசிங் சாண்ட் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அமைக்கப்படும் சாலைகள், சாதாரண சாலைகளை விட 3 மடங்கு வலிமையானதாக இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும், இந்த சாலைகள் 20 ஆண்டுகள் வரை நீடிக்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் மூலம் கட்டுமான செலவும் பராமரிப்பு செலவும் சுமார் 60% வரை குறையும் என மதிப்பிடப்பட்டுள்ளது.