இந்திய மண்ணில் 2 முறை வீழ்த்திய ஒரே கேப்டன்... - பெருமையைப் பெற்றார் ஸ்டீவ் ஸ்மித்...!
டெஸ்ட் தொடரில் இந்திய மண்ணில் இந்திய அணியை 2 முறை வீழ்த்திய ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ஸ்டீவ் ஸ்மித்.
இந்தியாவை வீழ்த்தி ஆஸ்திரேலியா வெற்றி
இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில், இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் தொடரின் 3-வது டெஸ்ட் இந்தூரில் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வந்தது.
இப்போட்டியின் இறுதியில், ஆஸ்திரேலிய அணி 18.5 ஓவர்களில் 1 விக்கெட் மட்டும் இழந்து, 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளது. இந்த வெற்றியின் மூலம், ஆஸ்திரேலிய அணி 2-1 என்ற கணக்கில் தொடரில் நீடித்துள்ளது.
பெருமையைப் பெற்றார் ஸ்டீவ் ஸ்மித்
இந்நிலையில், கடந்த 10 ஆண்டுகளில் நடந்த டெஸ்ட் போட்டிகளில், இந்திய மண்ணில் இந்தியாவை 2 முறை வீழ்த்திய ஒரே கேப்டன் என்ற பெருமையைப் பெற்றார் ஆஸ்திரேலியாவின் ஸ்டீவ் ஸ்மித்.
Steve Smith as a Test captain in India:
— Johns. (@CricCrazyJohns) March 3, 2023
Matches - 5
Won - 2
Lost - 2
Draw - 1
A record to remember for his lifetime considering how tough it is to win in India in the last decade. pic.twitter.com/5SB7aTkLYl
Captains to win two Tests in India since 2010:
— CricTracker (@Cricketracker) March 3, 2023
Alastair Cook
Steve Smith
End of list. pic.twitter.com/Vqntd88EII