கரணம் தப்பினால் மரணம்; 8-வது மாடியின் பால்கனியில் தொங்கிய குழந்தை - உயிரை காப்பாற்றிய நிஜ ஹீரோ
சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பின் 8வது மாடியின் பால்கனியில் தொங்கிய குழந்தையை அக்குடியிருப்பைச் சேர்ந்த ஒருவர் காப்பாற்றும் வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
குழந்தையை காப்பாற்றிய நிஜ ஹீரோ
குழந்தைகள் என்றாலே குறும்புத்தனமும், சின்ன சின்ன சேட்டைகளும் நிறைந்திருக்கும். அப்படி குழந்தைகள் செய்யும் சேட்டைகளுக்கு ஒரு அளவே கிடையாது.
அந்த வகையில் சீனாவின் குவாங்டாங் மாகாணத்தில் உள்ள ஃபோஷான் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் குழந்தை ஒன்று எட்டாவது மாடியின் பால்கனியில் உள்ள கம்பிகளுக்கு இடையே சிக்கி தொங்கி கொண்டிருந்ததை கண்ட குடியிருப்புவாசிகள் அதிர்ச்சி அடைந்து கதற தொடங்கினர்.
குழந்தையை எப்படியாவது காப்பாற்றுங்கள் என்று குழந்தையின் பெற்றோரும் துடிதுடி என்று துடித்தனர். இதையடுத்து குழந்தையின் அடுக்குமாடி குடியிருப்பின் அருகில் இருந்த நபர் ஒருவர் நிஜ ஹீரோவாக மாறி பால்கனி வழியாக குழந்தையை மீட்டார்.

தன் உயிரையும் துச்சம் என கருதி குழந்தையை காப்பாற்றிய நிஜ ஹீரோவுக்கு குடியிருப்புவாசிகள் மற்றும் இணையவாசிகள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். குழந்தையை மீட்ட நிஜ ஹீரோவின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
#SpiderMan in #foshan City.
— Siraj Noorani (@sirajnoorani) September 27, 2022
A young child had his head stuck on the balcony on the 8th floor, and his body was hanging in the air outside the building. The neighbor on the 7th floor, Huang Yuncong, stepped forward to save the child.#China #Sanshui pic.twitter.com/fLLTCRQelY