என்ன ஒரு டேஸ்ட்...இன்னைக்கி ஒரு பிடி - ஹோட்டலில் கிரில் சிக்கனை ருசி பார்க்கும் எலி

Viral Photos Puducherry
By Thahir Dec 08, 2022 09:14 AM GMT
Report

ஹோட்டல் ஒன்றில் உள்ள க்ரில் சிக்கனை எலி ஒன்று ருசி பார்க்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

கிரில் சிக்கனை ருசி பார்க்கும் எலி 

தமிழகத்தின் அருகில் உள்ள மாநிலம் புதுச்சேரி சுற்றுலா மாநிலமான இந்த பகுதிக்கு உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இதனால் அம்மாநிலம் முழுவதும் ஏரளாமான விடுதிகள் மற்றும் உணவு விடுதிகளும் செயல்பட்டு வருகின்றனர்.

என்ன ஒரு டேஸ்ட்...இன்னைக்கி ஒரு பிடி - ஹோட்டலில் கிரில் சிக்கனை ருசி பார்க்கும் எலி | A Rat Tasting Grilled Chicken At A Hotel

இந்த நிலையில் புதுச்சேரியில் உள்ள பிரபல ஹோட்டலில் எலி ஒன்று கிரில் சிக்கன் எந்திரத்தில் ஒளிந்து கொண்டு சிக்கனை ருசி பார்க்கும் புகைப்படங்கள் வெளியாகி கிரில் சிக்கன் பிரியர்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ருசியை மட்டும் பார்க்காமல் சுத்தத்தையும் பார்த்து சாப்பிட வேண்டும் என்கின்றனர் உணவு ஆய்வாளர்கள்.