திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி காலமானார்..!
passed away
A.rasa wife
By Anupriyamkumaresan
திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி, உடல் நலக் குறைவால் இன்று காலமானார். திமுக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக மார்பக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்தார். அவர் சென்னை குரோம்பேட்டையில் உள்ள ரேலா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். கொரோனா தொற்று நெருக்கடியிலும் கூட தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நேற்று முன்தினம் மருத்துவமனையில் இருந்த ராசாவின் மனைவியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். இந்த நிலையில் இன்று அவர் உயிரிழந்தது திமுக வட்டாரங்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.