அந்த மனசு தான் சார் கடவுள்...துடி துடித்த இளைஞர் - ஓடிச்சென்று உதவிய ஆ.ராசா
கோவையில் இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்பட்டு பரிதவித்த நிலையில், தனது காரில் ஏற்றி அந்த இளைஞரை ஆ.ராசா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.
விபத்தில் சிக்கிய இளைஞர்
திமுகவின் துணை பொதுச்செயலாளரும், நீலகிரி தொகுதி நாடாளுமன்ற உறுப்பினரான ஆ.ராசா நேற்று மாலை கோவை மாவட்டம் நீலாம்பூர் பகுதியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அப்போது அவிநாசி சாலையில், பைக்கில் சென்ற இளைஞர் ஒருவர் சாலை விபத்தில் ஏற்பட்டு உதவிக்காக பரிதவித்துள்ளார்.
உடனே உதவிய ஆ.ராசா
அந்த வழியாக வந்த ஆ.ராசா உடனே தன்னுடைய வாகனத்தைநிறுத்தி, அந்த இளைஞருக்கு உதவி செய்துள்ளார். தன்னுடைய காரில் அந்த இளைஞரை கோவையிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த ஆ.ராசா, தன்னுடன் பயணம் மேற்கொண்ட திமுகவின் மருத்துவரணி நிர்வாகி கோகுலையும் அந்த இளைஞருடன் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார்.