கடவுள் குழந்தையின் கைகளில் பிச்சை பாத்திரம்...மோடி குறித்து ஆ.ராசா சர்ச்சை பதிவு!
பிரதமர் மோடி குறித்து ஆ ராசா எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடவுள் குழந்தை
நடப்பாண்டின் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று முடிந்து. வாக்குப்பதிவுகள் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடந்தது. அதன் தேர்தல் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 293 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
அதேபோல காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அடங்கிய இந்திய கூட்டணி 234 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதனால் எந்த கட்சிக்கும் தனிப்பெருன்பான்மை கிடைக்காததால் ஆட்சி அமைப்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
ஆ.ராசா பதிவு
முன்னதாக பிரதமர் மோடி ஒரு பேட்டியில், நான் உயிரியல் ரீதியாக என்பதை தாண்டி, கடவுள் பூமியில் அவருடைய பணிகளை முடிக்க என்னை அனுப்பியுள்ளார் என்ற நினைக்கிறேன். என கூறியது சர்ச்சையானது. இதையடுத்து எதிர்க்கட்சிகள் கடவுளின் குழந்தை மோடி என்று கிண்டல் செய்தும் விமர்சித்தும் வருகின்றன.
இந்த நிலையில், நடந்து முடிந்த தேர்தலில் மோடி பெரும்பான்மை கிடைக்கப்பெறாததால் அதை கிண்டல் சேயும் விதமாக ஆ ராசா வெளியிட்ட பதிவு . அதில்,
கடவுள் குழந்தையின்
கைகளில் பிச்சை பாத்திரம் !
அட்சயப்பாத்திரத்தோடு
ஆந்திராவும் பீகாரும் ;
கடவுளை மற
மனிதனை நினை !
பெரியார் வாழ்கிறார் ! இவ்வாறு கூறப்பட்டுள்ளது.இதற்கு பாஜகவினர் கடும் பதிலடி கொடுத்து வருகிறார்.