அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு - வருத்தம் தெரிவித்த ஆ.ராசா
a raja regret for controversial speech about ctr nirmalkumar: அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசிய பேச்சு சர்ச்சையானதில் திமுக எம்.பி ஆ.ராசா தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.
அமைச்சரின் தாய் குறித்த சர்ச்சை பேச்சு
திமுக தலைவர் மு.க. ஸ்டாலினின் மிசா தியாகத்தை தமிழ்நாடு முதல்வர் விஜய் சட்டமன்றத்தில் கொச்சைப்படுத்தியதாக நேற்று திமுகவினர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு திமுக எம்.பி ஆ.ராசா, ‘எனக்குச் சந்தேகம் இருக்கு நீ யாருக்குப் பிறந்த?’ என அமைச்சர் சிடிஆர்.நிர்மல்குமாரின் தாயாரை குறித்து பேசியது கடும் சர்ச்சையாகியுள்ளது.
ஆ.ராசாவின் பேச்சுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், CPIM மாநில செயலாளர் பெ.சண்முகம், அமைச்சர் வன்னிஅரசு உள்ளிட்டோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திமுகவைச் சேர்ந்த எம். பி. கனிமொழியும், "யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு" என்ற திருக்குறளை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
ஆ.ராசா வருத்தம்
இந்நிலையில் தனது பேச்சுக்கு ஆ.ராசா வருத்தம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், "தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின் ‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில் கேள்விக்குள்ளாக்கியதில் எனக்கும் வருத்தம்தான்.
தியாகத்தில் விளைந்த ஒரு தலைவனின்
— A RAJA (@dmk_raja) September 13, 2026
‘அடையாளத்தை’ - உண்மை’யை வேண்டுமென்றே திட்டமிட்டு உள்நோக்கத்தோடு மீண்டும் மீண்டும் ‘பொய்’ என்று கொச்சைப்படுத்தி ‘ஏளனம்’ செய்ததால் ஏற்பட்ட ‘வலியை’ உணர்த்த ஏளனம் செய்தவரின் ‘அடையாளத்தை’ ‘உண்மையை’ உணர்ச்சி உந்துதலில்
கேள்விக்குள்ளாக்கியதில்…
என் வார்த்தைகளை திரும்பப் பெறுவதில் எனக்குத்தயக்கமில்லை. நீங்கள் திருந்தாவிட்டால் திருத்தப்படுவீர்கள்" என தெரிவித்துள்ளார்.