மீண்டும் வெடிக்கும் இந்தி மொழி சர்ச்சை : வைரலாகும் ஏ.ஆர்.ரஹ்மானின் பதிவு

viral arrahman amitsha
By Irumporai Apr 09, 2022 06:36 AM GMT
Report

மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார்.

இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தற்போதைய பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுப்பது போல உள்ளது. இந்த நிலையில் மாநிலங்களுக்கு இடையே மக்களுக்கு ஆங்கிலம் பயன்பாட்டு மொழியாக பயன்படுத்தப்பட்டு வருகிறது

. இந்த நிலையில் ஆங்கிலத்தின் பயன்பாட்டை குறைத்து , அதிக அளவில் இந்தி மொழியை பயன்படுத்த வேண்டும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா 37வது பாராளுமன்ற அலுவல் மொழிக் கூட்டத்தில் தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் , இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானின் தற்போதைய பதிவு ஒன்று இதற்கு பதிலடி கொடுப்பது போல உள்ளது.

ஏ.ஆர் ரகுமான்தனது சமூக வலைத்தள பக்கங்களில் புகைப்படம் ஒன்றை பகிர்ந்திருக்கிறார் ஏ.ஆர்.ரஹ்மான் அதில் ’தமிழணங்கு’ என்றும் ’இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்’ என்னும் பாரதிதாசன் வாசகம் எழுதப்பட்டிருக்கிறது.

மேலும் கையில் ழகரத்தை ஏந்திக்கொண்டு , கருத்த தேகம் கொண்ட ஒரு பெண் துள்ளிக்குதிப்பது போல படம் ஒன்று வரையப்பட்டிருக்கிறது அணங்கு என்றால் தேவைதை குறிக்கும் என்கிறார்கள். அதன்படி , தமிழணங்கு என்பது தமிழ் தேவதை என பொருளாகிறது.

இந்த பதிவு ஏ.ஆர்.ரஹ்மான் அமித்ஷாவிற்கு கொடுத்த பதிலடி என நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வைரலாக ஷேர் செய்து வருகின்றனர்.