இணையத்தை கலக்கும் ஏ.ஆர்.ரகுமான் மகளுடன் இருக்கும் மாஸ் புகைப்படம் - தெறிக்க விடும் ரசிகர்கள்
புகழ் பெற்ற இந்திய திரைப்பட நட்சத்திர இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரகுமான் வலம் வருகிறார். மணிரத்தினம் இயக்கத்தில் வெளியான ‘ரோஜா’ படத்தின் மூலம் தன்னுடைய இசைப் பயணத்தை தொடங்கினார்.
இதனையடுத்து, பல இந்தி, தமிழ், ஆங்கிலம் மற்றும் பல மொழித் திரைப்படங்களுக்கு இசையமைத்த இவர் இசைப்புயல் என்று ரசிகளால் அன்போடு அழைக்கப்படுகிறார்.
இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு அமீன் என்ற மகனும், ரஹீமா, கதீஜா என்கிற மகள்களும் இருக்கிறார்கள். இதில் மூத்த மகளான கதீஜாவிற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது.
ரியாசுதீன் ஷேக் முகமது என்கிற சவுண்ட் இஞ்ஜினியரை அவர் திருமணம் செய்ய உள்ளதாக ஏ.ஆர்.ரகுமான் சமூகவலைத்தளங்களில் அறிவித்திருந்தார்.
சமீபத்தில், ஏ.ஆர்.ரகுமான் மகள் கதீஜாவின் திருமணம் எளிமையான முறையில் நடந்தது. இத்திருமண நிகழ்வில் நெருங்கிய உறவினர்களும், நண்பர்களும் மட்டுமே கலந்துகொண்டுள்ளனர்.
இந்நிலையில், ஏ.ஆர்.ரகுமானும், அவருடைய மகள் புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம் -