மதங்களை கடந்து மனிதம் வளர்த்த கேரள மசூதி கல்யாண வைபோகம் : ஏ.ஆர்.ரகுமான் நெகிழ்ச்சி

A R Rahman
By Irumporai May 04, 2023 10:10 AM GMT
Report

கேரளாவில் இந்து முறைப்படி, மசூதியில் நடைபெற்ற திருமணத்தை குறிப்பிட்டு, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

 கேரளா ஸ்டோரி

கேரளா ஸ்டோரி திரைப்படம் சர்ச்சையினை கிளப்பியுள்ள நிலையில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஒரு வீடியோவினை வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2020ஆம் ஆண்டு, கேரள மாநிலத்தில் ஆலப்புழாவைச் சேர்ந்தவர் அஞ்சு என்பவர் குடும்பம் ஏழ்மையில் வாடும் போது, அஞ்சுவின் தாய் அங்குள்ள மசூதியில் திருமணம் நடத்த உதவி கோரியுள்ளார்.

வைரலாகும் வீடியோ 

உடனடியாக, செருவாளி மசூதி முஸ்லிம் ஜமாத் கமிட்டியினர் உதவி செய்ய முன் வந்தனர். மசூதியில் அஞ்சுவின் திருமணம் இந்து முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது. இந்து முஸ்லீம் என மத பேதமின்றி பலர் கலந்து கொண்டனர். அங்கு இந்து முறைப்படி சைவ சாப்பாடு பரிமாறப்பட்டது. மேலும், திருமண சீதனமாக 10 பவுன் தங்க நகையும், 2 லட்சம் ரூபாய் பணமும் அந்த கமிட்டி கொடுத்திருந்தார்கள்.

ஏழை பெண்ணுடைய திருமணத்தை நடத்தி வைத்த ஜமாத் கமிட்டிக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து இருந்தார்கள் என்பது குறிப்பிடதக்கது. இதனை பதிவிட்ட அந்த இடதுசாரி ஆதரவாளரின் டிவீட்டை பகிர்ந்து, மனிதகுலத்தின் மீதான அன்பு நிபந்தனையற்றதாகவும், அனைத்தையும் சரி செய்ய கூடியதாகவும் இருக்க வேண்டும் என இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் குறிப்பிட்டுள்ளார்.