அந்த விபத்தில் உயிர்தப்பியதே பெரிய விஷயம் : பதறிய ஏ.ஆர் ரஹ்மான் நடந்தது என்ன?

A R Rahman
By Irumporai Mar 06, 2023 05:27 AM GMT
Report

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மகன் ஏ.ஆர்.அமீன் விபத்தில் சிக்கி நூலிழையில் உயிர் தப்பியுள்ளார்.

இந்தியாவின் பிரபல மற்றும் முன்னணி இசையமைப்பாளர்களுள் ஒருவரான ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பாடகர் ஏ.ஆர்.அமீன்.

ஏ.ஆர்.அமீன் விபத்து  

தன் குழந்தைப்பருவத்திலேயே தன் அப்பாவின் இசையில் பாடகராக அறிமுகமான ஏ.ஆர்.அமீன், சென்ற 2015ஆம் ஆண்டு வெளியான ஓகே கண்மணி படத்தின் பாடலான மௌலா வா சல்லிம் பாடல் மூலம் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்றார்.

அதன் பின், தொடர்ந்து தன் தந்தை ரஹ்மானின் இசையில் பாடி வரும் அமீன், இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசையிலும் முன்னதாகப் பாடியுள்ளார்.

அந்த விபத்தில் உயிர்தப்பியதே பெரிய விஷயம் : பதறிய ஏ.ஆர் ரஹ்மான் நடந்தது என்ன? | A R Ameen Accident Rahman World Class Safety

மேலும் தனியாக ஆல்பம் பாடல்களிலும் கவனம் செலுத்தி வருகின்றனர். இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் ஏ.ஆர். அமின் இசைநிகழ்ச்சி ஒன்றில் நூலிழையில் உயிர் தப்பினார் , இந்த சம்பவம் குறித்து அமீன் தனது இன்ஸ்டாகிராம் பதிவில் :   

இறைவனுக்கு நன்றி

இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும், நலம் விரும்பிகளுக்கும், எனது ஆன்மிக ஆசிரியருக்கும் நன்றி கூறுகிறேன். மூன்று இரவுகளுக்கு முன்பு, நான் ஒரு பாடலுக்கான படப்பிடிப்பில் இருந்தேன், கேமரா முன் நடிப்பதில் கவனம் செலுத்தியபோது, ​​பொறியியல் மற்றும் பாதுகாப்பை குழு கவனித்துக்கொண்டிருக்கும் என்று நான் நம்பினேன்.

நான் அந்த இடத்தின் நடுவில் இருந்தபோது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முழு டிரஸ் மற்றும் சரவிளக்குகள் கீழே விழுந்தன. இங்கும் அங்கும் சில அங்குலங்கள் இருந்திருந்தால், சில நொடிகள் முன்னரோ அல்லது பின்னரோ, மொத்த ரிக் நம் தலையில் விழுந்திருக்கும்.

நானும் எனது குழுவினரும் அதிர்ச்சியடைந்து அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை என பதிவிட்டுள்ளார். இந்த விபத்து குறித்து இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கூறுகையில் படபிடிப்பு தளங்களில் உலகத் தரம் வாய்ந்த பாதுகாப்பு அம்சங்கள் இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.