இந்திய அணி மோதும் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட் வாங்குவதில் தள்ளுமுள்ளு…போலீசார் தடியடி - பெண் உயிரிழப்பு

Cricket Hyderabad Death
By Thahir 1 வாரம் முன்

கிரிக்கெட் போட்டியின் டிக்கெட்டுகளை வாங்க குவிந்த ரசிகர்கள் மீது போலீசார் நடத்திய தடியடியில் ஏராளமானோர் படுகாயமடைந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர்  உயிரிழந்துள்ளார்.

டிக்கெட் வாங்க திரண்ட கூட்டம் - பெண் உயிரிழப்பு 

இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, இந்திய அணியுடன் மூன்று டி.20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டி மொஹாலி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணி மிரட்டல் வெற்றி பெற்றது.

வருகிற 25ம் தேதி தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத்தில் உள்ள ஜிம்கானா மைதானத்தில் நடைபெற உள்ளது.

இந்தியா - ஆஸ்திரேலியா T20 போட்டிக்கான டிக்கெட்டுகள் இன்று விற்பனை செய்யப்பட்டது. டிக்கெட்டுகளை வாங்க ஆயிரக்கணக்கானோர் திரண்டனர்.

இந்திய அணி மோதும் கிரிக்கெட் போட்டியின் டிக்கெட் வாங்குவதில்  தள்ளுமுள்ளு…போலீசார் தடியடி - பெண் உயிரிழப்பு | A Push To Buy Cricket Match Tickets Women Death

கூட்டத்தை கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினார். இந்த நிலையில் கூட்ட நெரிசலில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் பலர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.