பிரபல சீரியல் நடிகையை திருமணம் செய்த தயாரிப்பாளர் - யார் இந்த ஜோடி தெரியுமா
சின்னத்திரை நடிகையான மஹாலக்ஷ்மி பிரபல தயாரிப்பாளர் ரவி என்பரை இன்று திருமணம் செய்து கொண்டார்.
மஹாலக்ஷ்மி திருமணம்
சன் டிவியில் ஒளிப்பரப்பான வாணி ராணி சீரியலின் மூலம் பிரபலமானவர் மஹாலக்ஷ்மி. இவர் ஆபிஸ், ஒரு கை ஒசை உள்ளிட்ட முக்கிய சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனமான லிப்ரா புரோடெக்சன் உரிமையாளர் ரவி. இவர் இன்று சீரியல் நடிகை மஹாலக்ஷ்மியை இன்று திருமணம் செய்து கொண்டார்.
இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில்,
மஹாலட்சுமி போல ஒரு பொண்ணு கிடச்சா வாழ்க்கை நல்லா இருக்குனு சொல்லவாங்க..,
ஆனா அந்த மகாலட்சுமியே வாழ்க்கையை கிடச்சா...
Coming soon live in FAT MAN FACTS
Kutty story with my pondatiiiii
என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
தற்போது இவர்களின் திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.