லாரி மீது தனியார் பேருந்து மோதி விபத்து - பயணிகள் 2 பேர் உயிரிழப்பு

Death
By Thahir Jan 29, 2023 02:58 AM GMT
Report

உளுந்தூர்பேட்டை புறவழிச் சாலையில் தனியார் ஆம்னி பேருந்து எருமை மாடுகள் ஏற்றிச் சென்ற லாரி மீது மோதிய விபத்தில் பேருந்தில் பயணம் செய்த இருவர் உயிரிழந்தனர்.

லாரி மீது மோதிய தனியார் பேருந்து 

சென்னையில் இருந்து 35 மேற்பட்ட பயணிகளுடன் தனியார் ஆம்னி பேருந்து ஒன்று கன்னியாகுமரி மார்த்தாண்டம் நோக்கி சென்று கொண்டிருந்தது அந்த பேருந்தை திருநெல்வேலியைச் சேர்ந்த தவமணி என்பவர் ஓட்டி சென்றுள்ளார்.

இந்த தனியார் ஆம்னி பேருந்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் தனியார் பால் பண்ணை அருகே சென்று கொண்டிருந்தபோது , ஆந்திராவில் இருந்து கேரளாவிற்கு மாடுகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்த லாரி மீது அதிவேகமாக மோதி விபத்துக்குள்ளானது.

A private bus collided with a truck

2 பேர் உயிரிழப்பு

இந்த விபத்தில் தனியார் ஆம்னி பேருந்தில் இடது புறத்தில் பயணம் செய்த ஒரு ஆண் ஒரு பெண் என இருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 20க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

இதே போல விபத்தில் சிக்கிய லாரியில் கொண்டு செல்லப்பட்ட மாடுகளில் 4 மாடுகள் அடுத்தடுத்து உயிரிழந்தது. விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த உளுந்தூர்பேட்டை போலீசார் விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தால்  சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.