சமையல் கூடமாக மாறிய போலீஸ் ஸ்டேஷன் - சுட சுட சமையல் தயாரித்த போலீசாருக்கு ஐஜி நோட்டீஸ்..!

Kerala
By Thahir Jul 29, 2023 04:18 AM GMT
Report

கேரளாவில் காவல் நிலையத்தில் போலீசார் சுட சுட சமையல் செய்த வீடியோ வைரலானதை அடுத்து விளக்கம் கேட்டு ஐஜி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சமையல் கூடமாக மாறிய போலீஸ் ஸ்டேஷன்

கேரளா மாநிலம் பத்தனம்திட்டை மாவட்டம் இலவம்திட்டா போலீஸ் நிலையத்தில் போலீசார் சீருடை அணிந்த நிலையில் கோழிக்கறி குழம்பு, மரவள்ளிக்கிழங்கு களி போன்றவற்றை சமைத்து ருசித்து சாப்பிட்டனர்.

அதை வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டனர். வீடியோவில் போலீஸ்காரர் ஒருவர் கடைக்கு சென்று கோழி இறைச்சி வாங்கியது முதல் வெங்காயம் வெட்டியது.

A police station converted into a kitchen

இஞ்சி, பூண்டு உரிப்பது, பின்னர் மசாலா போட்டு சமைப்பது, அவற்றை பரிமாறி சாப்பிடுவது போன்றவற்றை பின்னணி பாடலுடன் சிறப்பாக எடிட் செய்யப்பட்டு இருந்தது.

ஐஜி விளக்கம் கேட்டு நோட்டீஸ் 

மேலும் சமைத்த சாப்பாட்டை அதிகாரிகளுக்கு பரிமாறி கொண்டதும், ஒருவருக்கொருவர் ஊட்டி விட்டதும் வீடியோவில் இடம் பெற்றிருந்தது.

இந்த வீடியோ இணையத்தில் வைரலானது. 9 லட்சத்துக்கும் அதிகமான லைக்குகளையும், 6 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கமென்ட்களையும் பெற்றுள்ளது.

சிலர் இந்த வீடியோவை பார்த்துவிட்டு போலீசாரை பாராட்டியும் வருகின்றனர். இந்த சம்பவம் ஒரு வாரத்திற்கு முன்பு நடந்தது என்று அதை போலீஸ் அதிகாரி ஒருவரே இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த சம்பவத்திற்கு விளக்கம் கேட்டு தெற்கு மண்டல ஐஜி நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.