700 ரூபாய்க்கு Thar கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் - சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா!

Viral Video Uttar Pradesh India Anand Mahindra
By Jiyath Feb 03, 2024 08:30 AM GMT
Report

ரூ.700-க்கு கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவனுக்கு மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திரா இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

சிறுவனின் விருப்பம் 

உத்திர பிரதேச மாநிலம் நொய்டாவைச் சேர்ந்த சிறுவன் சிக்கு யாதவ். இவர் தன்னிடம் உள்ள 700 ரூபாயை வைத்து மஹிந்திரா நிறுவனத்தின் Thar என்ற காரை வாங்க விரும்பினார்.

700 ரூபாய்க்கு Thar கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் - சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா! | A Pleasant Surprise By Anand Mahendra To Chiku

இதனை சிறுவனின் தந்தை வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டார். இந்த வீடியோ வைரலான நிலையில், அதனை மஹிந்திரா நிறுவனத்தின் தலைவர் ஆனந்த் மஹிந்திராபார்த்துள்ளார்.

இந்நிலையில் சிக்குவின் காரை வாங்கும் விருப்பத்தை மஹிந்திராவால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலும், தார் கார் தயாரிக்கப்படும் சாக்கன் ஆலையை அவர் பார்வையிட ஏற்பாடு செய்தார் ஆனந்த் மஹேந்திரா. இதனையடுத்து கார் பாகங்கள் எவ்வாறு தயாரிக்கப்படுகின்றன என்பதை சிக்கு பார்வையிட்டார்.

தேசிய விலங்கு, பறவை, பூ தெரியும் - இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..?

தேசிய விலங்கு, பறவை, பூ தெரியும் - இந்தியாவின் தேசிய காய்கறி எது தெரியுமா..?

ஆனந்த் மஹேந்திரா

இதனை வீடியோவாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா "சிக்கு சாக்கன் ஆலைக்கு சென்றுள்ளார். வைரலான வீடியோவிலிருந்து நிஜ வாழ்க்கை சாகசம் வரை..

700 ரூபாய்க்கு Thar கார் வாங்க ஆசைப்பட்ட சிறுவன் - சர்ப்ரைஸ் கொடுத்த ஆனந்த் மஹிந்திரா! | A Pleasant Surprise By Anand Mahendra To Chiku

இளம் தார் ஆர்வலரான சிக்கு, எங்களின் சக்கன் ஆலைக்கு, அவருடைய புன்னகையையும் உத்வேகத்தையும் கொண்டுவந்தார். எங்கள் சிறந்த பிராண்ட் தூதுவர்களில் ஒருவரை ஹோஸ்ட் செய்ததற்காக mahindraauto குழுவிற்கு நன்றி

(இந்த முயற்சி அவனுடைய அப்பாவிடம் ரூ.700க்கு ஒரு தார் வாங்கித் தரும்படி கேட்பதிலிருந்து அவனைத் தடுக்கும் என்று நம்புகிறேன்!)” என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.