நாடாளுமன்றத்தில் பிரதமரை தாக்க முயற்சி?

Narendra Modi
By Fathima Feb 05, 2026 11:17 AM GMT
Report

நாடாளுமன்ற மக்களவையில் பிரதமர் மோடியை காங்கிரஸ் பெண் எம்.பிக்கள் தாக்க இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டை காங்கிரஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில் குடியரசுத்தலைவர் தீர்மானத்துக்கு நன்றி தெரிவிக்கும் விவாதம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று மக்களவையில் எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக, பிரதமர் மோடி நன்றி தெரிவிக்கும் தீர்மானம் ரத்து செய்யப்பட்டது.

நாடாளுமன்றத்தில் பிரதமரை தாக்க முயற்சி? | A Plan To Attack The Prime Minister In Parliament

இந்நிலையில் இன்று பிரதமர் மோடி மீது காங்கிரஸ் எம்பிக்கள் தாக்குதல் நடத்த திட்டமிட்டதாக சபாநாயகர் ஓம் பிர்லா குற்றம் சாட்டியுள்ளார்.

அவர் பேசுகையில், பிரதமர் கலந்துகொள்ள முடியாதளவுக்கு நிலைமை மோசமாக உள்ளது, எதிர்க்கட்சியினர் திட்டம் தெரிந்தே பிரதமரை வரவேண்டாம் என கூறினேன், பேச வேண்டாம் என்றும் கோரிக்கை விடுத்தேன்.

நாடாளுமன்றத்தில் பிரதமரை தாக்க முயற்சி? | A Plan To Attack The Prime Minister In Parliament

காங்கிரஸ் பெண் எம்பிக்கள் வரலாற்றில் இல்லாத சம்பவத்தை நிகழ்த்த திட்டமிட்டிருந்தனர், பிரதமரை பேசவிடாமல் தடுத்தனர் என கூறியுள்ளார்.

காங்கிரஸின் உண்மையான முகம் வெளிப்பட்டுவிட்டதாக பாஜக கூறியுள்ளது.

இதற்கு பதிலளித்துள்ள காங்கிரஸ், நாடாளுமன்றத்தை எதிர்கொள்ள பிரதமர் பயப்படுவதாக தெரிவித்துள்ளது.