41 வருடத்திற்கு முன்னர் தயாரித்த ஒரு கேக் துண்டு ரூ.27 ஆயிரம் - என்ன ஸ்பெஷல் தெரியுமா?
41 வருடங்களாக பாதுகாக்கப்பட்ட ஒரு கேக் துண்டு ஏலத்திற்கு வர உள்ளதாகவும், ஒரு துண்டின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் தேராயமாக ரூ.27 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது.
உலக நாடுகளை திரும்பி பார்க்க வைத்த திருமணம்
அண்மையில் இங்கிலாந்து ராணி எலிசபெத் காலமானார். தற்போது அவரது குடும்பத்தை பற்றி ஒரு தகவல் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
இங்கிலாந்து அரசர் சார்லஸ் மற்றும் டாயான சம்மந்தப்பட்ட ஒரு பொருள் ஏலத்திற்கு வர உள்ளது. 1981 ஆம் ஆண்டு தற்போது இங்கிலாந்து அரசராக இருக்கும் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானாவின் திருமணம் பெரிதாக நடைபெற்றது.

40 ஆண்டுகளுக்கு முன்பே 3000 விருந்தினர்களோடு இவர்களுடைய திருமணம் உலகையே திரும்பி பார்க்க வைத்த ஒரு திருமணம் ஆக இருந்தது.
40 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்ட கேக்
குறிப்பாக வெளிநாடுகளில் நடக்கும் திருமணங்களில் கேக்குகளுக்கு தனி இடம் உண்டு. அந்த வகையில் 41 வருடங்களுக்கு முன்பு நடைபெற்ற இவர்களது திருமணத்தில் வழங்கப்பட்ட ஒரு கேஸ் லைஸ் தான் தற்பொழுது ஏலத்திற்கு வர இருக்கிறது.

கேக் வாங்கினால் இரண்டு நாட்களுக்குள் சாப்பிட்டு விட வேண்டும் இல்லை என்றால் அது கெட்டுப்போகிவிடும். ஆனால் 40 ஒரு ஆண்டுகளுக்கு முன்பு நடந்த திருமணத்தில் கிடைத்த ஒரு கேக் ஸ்லைஸ் இப்பொழுது ஏலத்திற்கு விடப்பட இருக்கிறது.
நியூயார்க் போஸ்ட் வெளியிட்டுள்ள அறிக்கையில் அந்த கேக் துண்டு திருமணத்திற்கு வந்திருந்த நிஜெல் ரிக்கெட்ஸ் என்ற ஒரு விருந்தினருக்கு அளிக்கப்பட்டதாகும்.
ஏலத்திற்கு வரும் கேக் துண்டு
இந்த கேக்கை நிஜெல் இத்தனை ஆண்டுகளாக பாதுகாத்து வந்துள்ளார். சமீபத்தில் இவர் உயிரிழந்தார். அதெ தொடர்ந்து இங்கிலாந்தில் உள்ள டோரி மற்றும் ரீஸ் ஏல வீடு. அந்த கேக்கை ஏலம் விடப்போகிறார்கள்.
தோராயமாக இந்திய ருபாயின் மதிப்பில் கேக் ஸ்லைஸின் மதிப்பு ரூ.27 ஆயிரம் இருக்கும் என்று கூறப்படுகிறது. 41 வருடஙகளாக பாதுகாக்கப்பட்ட அந்த கேக் அதனுடைய ஒரிஜினல் பேக்கிங்கில் இருக்கிறது.
டோரி மற்றும் ரீஸ் வலைத்தளம் அதில் தங்களது அரசு பணியாளர்களுக்கு நன்றி தெரிவித்து கைகளால் எழுதப்பட்ட ஒரு குறிப்பும் இருந்துள்ளது. “டயானாவிற்கும் எனக்கும் சொல்வதற்கு வார்த்தைகளே கிடையாது;
நீங்கள் இவ்வளவு முக்கியமான ஒரு பொருளை கண்டுபிடிப்பதற்கு எத்தனையோ பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். அதை நாங்கள் பொக்கிஷம் போல பாதுகாப்போம்” என்ற குறிப்பு அதில் இருக்கிறது.