விமானத்தில் பெண் பயணி மீது சிறுநீர் கழித்த நபர் 4 மாதங்கள் பயணிக்க தடை

Air India
By Thahir Jan 20, 2023 03:22 AM GMT
Report

ஏர் இந்தியா விமானத்தில் பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக குற்றம்சாட்டப்பட்ட நபர் விமானத்தில் பயணம் செய்ய மேலும், 4 மாதங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா விமானத்தில் பறக்க தடை 

கடந்த நவம்பர் மாதம் அஜய் மிஸ்ரா என்பவர், நியூயார்க்கில் இருந்து டெல்லிக்கு ஏர் இந்தியா விமானத்தில் குடிபோதையில் வயதான பெண்மணி மீது சிறுநீர் கழித்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில், கர்நாடக மாநிலத் தலைநகர் பெங்களூரில் தலைமறைவாகி இருந்த சங்கர் மிஸ்ராவை டெல்லி போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

a-person-who-urinates-is-banned-from-traveling

மேலும், சங்கர் மிஸ்ரா பணியாற்றி வந்த பன்னாட்டு நிறுவனம் அவரை டிஸ்மிஸ் செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில், ஏர் இந்தியா நிறுவனம் விமானத்தில் அவர் பயணிக்க 30 நாட்கள் ஏற்கனவே தடை விதித்து உத்தரவிட்டிருந்த நிலையில், விமானத்தில் பயணம் செய்ய மேலும், 4 மாதங்களுக்கு தடை விதித்து அந்நிறுவனம் உத்தரவிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.