சீனாவில் இருந்து வந்தவருக்கு கொரோனா தொற்று - பரிசோதனைகள் தீவிரம்

COVID-19 China India
By Thahir Dec 26, 2022 05:44 AM GMT
Report

சீனாவில் இருந்து வந்த இந்தியா வந்த உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த நபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனாவில் இருந்து இந்தியா வந்தவருக்கு கொரோனா 

உத்தரப்பிரேதச மாநிலம், ஆக்ராவின் ஷாகஞ்ச் பகுதியைச் சேர்ந்த 40 வயது உடைய ஒருவர், சீனாவில் தங்கி பணிபுரிந்து வந்த நிலையில், விடுமுறைக்காக இந்தியா திரும்பினார்.

A person from China is infected with Corona virus

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு கொரோனா அறிகுறிகள் ஏதும் இல்லாத நிலையில், அவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

பரிசோதனைகள் தீவிரம் 

உருமாற்றம் பெற்ற கொரோனா என்பதை அறிந்து கொள்ள மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனைக்காக அவரது மாதிரிகளை லக்னோவில் உள்ள ஆய்வகத்திற்கு அனுப்பட்டுள்ளது.

அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் யார் என்பதை கண்றியும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை தொடர்ந்து ஆக்ராவில் உள்ள ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் கொரோனா பரிசோதனை அதிகரிக்கப்பட்டுள்ளது.