இன்று அப்துல் கலாமின் நினைவுநாள் - நினைவிடத்தில் மரியாதை செலுத்திய குடும்பத்தினர்
அப்துல் கலாம்
அப்துல்கலாம் தமிழ்நாட்டில் உள்ள இராமேஸ்வரம் என்ற இடத்தில் பிறந்து வளர்ந்தார். ஏவுகணை மற்றும் ஏவுகணை ஏவல் வாகன தொழில்நுட்ப வளர்ச்சியில் கலாமின் சிறந்த ஈடுபாட்டால் அவரை இந்திய ஏவுகணை நாயகன் என்று அன்போடு அழைக்கப்பட்டார். அப்துல்கலாம் இந்தியாவின் 11வது குடியரசு தலைவராக பணியாற்றினார்.
அப்துல் கலாம் மறைவு
மாணவர்களின் எழுச்சி நாயகனாகவும், இளைஞர்களின் கனவு நாயகனாகவும், இந்தியாவை வல்லரசு நாடாக மாற்றுவதை குறிக்கோளாக கொண்டு பல விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்படுத்தினார் அப்துல் கலாம். கடந்த 2015-ம் ஆண்டு ஜூலை 27-ம் தேதி மேகாலயா மாநிலத் தலைநகர் ஷில்லாங்கில் மாணவர்களுடன் உரையாற்றிக்கொண்டிருந்த போது, அப்துல்கலாமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்தார்.
மரியாதை செலுத்திய குடும்பத்தினர்
அவரது சாதனைகளையும், நினைவைப் போற்றும் வகையில், மத்திய அரசு பல கோடி ரூபாய் செலவில் ராமேஸ்வரம் பேக்கரும்பில் நினைவிடம் அமைத்தது. அந்த நினைவிடத்தில் அப்துல்கலாமின் வாழ்க்கை வரலாறு குறித்து வாசகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவர் பயன்படுத்திய உடைமைகளும் வைக்கப்பட்டிருக்கின்றன.
இன்று அப்துல் கலாமின் 7-ம் ஆண்டு நினைவு தினம் இந்திய மக்களால் அனுசரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் நினைவிடத்தில் அவரது குடும்பத்தினர் மரியாதை செலுத்தினர். இது குறித்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.