8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பெரியப்பா கைது
Chennai
Sexual abuse
By Petchi Avudaiappan
ஓட்டேரி அருகே 8 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த உறவினர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
சென்னை ஓட்டேரி அருகே வசித்து வரும் சிறுமி ஒருவருக்கு பெரியப்பா முறை வரும் டில்லிபாபு என்பவர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் சிறுமியின் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து டில்லிபாபுவை கைது செய்து போலீசார் விசாரித்தனர். இதில் சிறுமிக்கு பாலியல் தொல்லை தந்ததை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து டில்லிபாபு மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.