மர்ம மரணம்; பாதாளத்தில் புதைக்கப்பட்ட முதியவர் - 4 நாட்களாக கேட்ட அழுகுரல்! நடந்து என்ன?
பலியானதாக கருதி புதைக்கப்பட்ட முதியவர் உயிரோடு இருந்து சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்ம மரணம்
கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான மால்டோவாவில் உள்ள உஷ்டியா கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி(74). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்து பிணமாக கிடந்தார். இந்த் மர்மம் தொடர்பாக அவரது உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலறிந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைகாக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பான தீவிர விசாரணைக்கு பிறகு மூதாட்டி கொலை செய்யப்பட்டதாக உறுதி செய்யப்பட்டது.
இந்த கொலையில் மூதாட்டியின் உறவினரான அதே கிராமத்தை சேர்ந்த 18 வயது இளைஞருக்கு சம்பந்தம் இருப்பதாக தெரியவந்தது.இதனால் போலீசார் விரைந்து சென்று மதுபோதையில் மயங்கி இருந்த அந்த இளைஞரை கைது செய்து வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது வீட்டிற்கு பின்புறத்தில் ஒருவர் உதவிகேட்டு அழும் குரல் கேட்டுள்ளது.
பாதாளத்தில் முதியவர்
மண்ணுக்குள் இருந்து அந்த குரல் வந்ததால் போலீசார் அதிர்ச்சியடைந்தனர். உடனே அப்பகுதியை தோண்ட தொடங்கினர். அங்கு மண்ணுக்குள் ஒரு முதியவர் உயிருடன் இருந்ததை கண்டறிந்ததனர். கழுத்தில் படுகாயங்களுடன் முதியவர் உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், தான் 4 நாட்களாக மண்ணுக்குள் புதைக்கப்பட்டிருந்ததாக முதியவர் அதிர்ச்சி தகவலை தெரிவித்தார். மேலும் 4 நாட்களுக்கு முன்பு இளைஞரும் அவரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியதில் கைகலப்பு ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞர் முதியவரின் கழுத்தில் கத்தியால் வெட்டியுள்ளார். படுகாயமடைந்த முதியவர் மயங்கியதும் இளைஞர் வீட்டின் பின்புறம் உள்ள மண்ணில் புதைத்தார். முதியவர் மயக்கநிலையில் இருந்து மீண்ட நிலையில் 4 நாட்களாக உதவிகேட்டு மண்ணுக்குள் கண்ணீருடன் காத்திருந்துள்ளார்.
கொலை வழக்கு தொடர்பாக இளைஞர் வீட்டில் நடத்திய விசாரணையில் முதியவர் உயிருடன் மீட்கப்பட்டார். கொல்லப்பட்ட மூதாட்டி, கைது செய்யப்பட்ட இளைஞர், உயிருடன் மீட்கப்பட்ட முதியவர் ஆகியோரின் பெயர் விவரங்களை போலீசார் வெளியிடவில்லை.