உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத செய்யுங்க எலான் மஸ்க் போட்ட ட்வீட் : கோபத்தில் உக்ரைன் மக்கள்

Elon Musk Ukraine
By Irumporai Oct 04, 2022 03:08 AM GMT
Irumporai

Irumporai

in உலகம்
Report

பிரபல தொழிலதிபர் எலான் மஸக் ரஷ்யா ,உக்ரைன் போருக்கு ஆலோசனை கூறி ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைன் ரஷ்யா போர்

ரஷ்ய அதிபர் புதின் பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரைன் நாட்டின் மீது போர் அறிவித்து ராணுவ நடவடிக்கை மேற்கொண்டார். எட்டு மாதங்கள் ஆகியும் உக்ரைன் மீதான ரஷ்யாவின் இந்த திடீர் படையெடுப்பு ஓய்ந்தபாடில்லை.

தொடக்கத்தில்  ரஷ்யா வெகு வேகமாக முன்னேறி உக்ரைனின் முன்னணி நகரங்களை கைப்பற்றியது. இருப்பினும் உக்ரைன் சரணடையாமல் ரஷ்ய படைகளை எதிர்த்து போராடி ரஷ்யாவுக்கு ஆச்சரியம் தந்தது.

உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர இத செய்யுங்க எலான் மஸ்க் போட்ட ட்வீட் : கோபத்தில் உக்ரைன் மக்கள் | A New Study Suggests Middle Of The Earth Core

உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய அமெரிக்க கூட்டமைப்பான நேட்டோ நாடுகள் பொருளாதார ஆயுத உதவிகளை வழங்கி வந்த நிலையில் ரஷ்யா பின்னடைவை சந்தித்து வருகின்றது.

இந்த நிலையில் ,போரை நிறுத்தி அமைதியை நிலைநாட்ட உலகின் முன்னணி தொழிலதிபரும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓவுமான எலான் மஸ்க் ட்விட்டரில் ஆலோசனை வழங்கியுள்ளார்.

எலான் மஸ்க் தனது ட்விட்டர் பதிவில் இந்த போரில் அமைதியை ஏற்படுத்தி ரஷ்யா தன்னுடன் இணைத்துக் கொண்ட 4 பிராந்தியங்களில் ஐநா சபை கண்காணிப்புடன் வாக்கெடுப்பு நடத்த வேண்டும்.அதன் முடிவுகளின் படி போரில் இரு தரப்பும் அமைதியை ஏற்க வேண்டும் என்றுள்ளார்.

எலான் மஸ்க் நடத்திய வாக்கெடுப்பு

அத்தோடு நிற்காமல், க்ரைமியா மற்றும் டான்பாஸ் பிராந்திய மக்கள் தாங்கள் ரஷ்யா அல்லது உக்ரைன் ஆகிய இரு நாடுகளில் எந்த நாட்டுடன் இருக்க விரும்புகிறார்கள் என வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று ட்விட்டரில் வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

இந்த ஆலோசனை உக்ரைன் நாட்டு மக்கள் அந்நாட்டு அதிபர் செலன்ஸ்கி ஆகியோரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதற்கு உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி கோபத்துடன் உங்களுக்கு எந்த எலான் மஸ்கை பிடிக்கும். ரஷ்யா ஆதரவு எலான் மஸ்கா அல்லது உக்ரைன் ஆதரவு எலான் மஸ்கா என ட்விட்டரில் போட்டி வாக்கெடுப்பு நடத்தியுள்ளார்.

அதேபோல் எலான் மஸ்கின் கருத்து போரில் உக்ரைன் மக்கள் கொண்டுள்ள உறுதித்தன்மை மற்றும் தியாகத்தை கொச்சைப்டுத்துவதாக உள்ளது என பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.