கொட்டப்போகும் கன மழை - புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வு மண்டலம்..!
தமிழகம் நோக்கி வீசும் மேற்கு திசை காற்று மற்றும் வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இன்று முதல் 9ந் தேதி வரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
உருவாகிறது புதிய புயல்
தென்கிழக்கு அரபிக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் 24 மணி நேரத்தில் புயலாக வலுப்பெற கூடும் எனவும் தெரிவித்துள்ளது. இதனால் அடுத்த 3 நாட்களுக்கு கேரளா, தெற்கு கர்நாடகாவின் உள்பகுதி,
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் ஒரிரு நாட்களில் தென்மேற்கு பருவமழை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.