உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி - அதீத கனமழைக்கு வாய்ப்பு
வடமேற்கு வங்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.
அதீத கனமழைக்கு வாய்ப்பு
இந்தியாவில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் பல பகுதிகளில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது.
இந்நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ஒடிசா, மேற்கு வங்க கடலோர பகுதியை அடுத்த வடமேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக வலுப்பெற்றுள்ளது.
இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். இதன் காரணமாக ஒடிசா பகுதியில் அடுத்த 3 நாட்களுக்கு அதீத கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சத்தீஸ்கர், கோவா, மேற்கு மத்தியப்பிரதேசம், கிழக்கு மத்தியப்பிரதேசம், குஜராத், ஆந்திர பிரதேசம், கேரளா மாநிலங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அதே நேரத்தில் தற்போது உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் தமிழகத்திற்கு எந்த வகையிலும் ஆபத்தை விளைவிக்காது.
மேலும் கனமழை முதல் அதீத கனமழையோ பெய்ய வாய்ப்புக்கள் எதுவும் இல்லை எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.