40 அடி உயரம் கொண்ட புதிய வேல் - திருச்செந்தூர் முருகன் கோவிலில் நெகிழ்ச்சி சம்பவம்!
திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரத்தில் 40 அடி உயரம் கொண்ட புதிய வேல் பொருத்தப்பட்டுள்ளது.
திருச்செந்தூர்
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றாகத் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் சிறந்து விளங்குகிறது. திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.
இந்த கோவிலில் 15 ஆண்டுகளுக்குப் பிறகு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.இதற்காகத் திருச்செந்தூர் முருகன் கோவில் ராஜகோபுரம் புதுப்பிக்கும் பணிகளும், கும்பாபிஷேக திருப்பணிகள் மும்மரமாக நடந்து வருகிறது.
புதிய வேல்
அதன் ஒரு பகுதியாக ராஜகோபுரத்தில் புதிதாக வடிவமைக்கப்பட்ட 40 அடி உயரம் கொண்ட பிரமாண்ட வேல் பொருத்தும் பணிகள் நேற்று முடிவடைந்தது. ஏற்கனவே ராஜகோபுரத்திலிருந்த வேல், சுமார் 5 கிலோ மீட்டர் தூரத்திலிருந்து பார்த்தாலும் தெரியும்.
அதேபோல் புதிதாகப் பொருத்தப்பட்ட இந்த வேலும், பக்தர்கள் மனதில் நீங்கா இடம் பெறும் என்று கோவில் நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
